பக்கம்:பழைய கணக்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நாற்பது நாள் வாரியார் கதை. வாரத்தில் இரண்டு நாட்கள் எஸ். வி. சகஸ்ரநாமம் குழுவினரின் பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற நாடகங்கள்.

விழாவைத் துவங்கி வைக்க கவர்னரை அழைப்பதென்று முடிவு செய்தோம் அப்போது மைசூர் மகாராஜா தான் தமிழ்நாடு கவர்னராக இருந்தார். மைசூரிலிருந்து அவ்வப்போது சென்னை வந்து போய்க் கொண்டிருந்தார். கவர்னர் உத்தியோகத்துக்கான சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். நான், சகஸ்ரநாமம், லிஃப்கோ சர்மா மூவரும் காரிலேயே மைசூருக்குப் போய் மகாராஜாவைச் சந்தித்து, “காமராஜ் தலைமையில் சத்ய சபா உருவாகியிருக்கிறது. வாரியார் ராமாயணம் சொல்ல ஒப்புக் கொண்டுள்ளார். தாங்கள்தான் விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டோம். காமராஜ் மீது மகாராஜா பெரும் மதிப்பு வைத்திருந்ததால் உடனே மகிழ்ச்சியோடு ஒப்புதல் தெரிவித்தார்.

மைசூர், மகாராஜா விழாப் பந்தலுக்குள் வந்ததும் பெரிய பரபரப்பு. நாதஸ்வர இசை முழங்க பூர்ண கும்பத்துடன் அவரை வரவேற்றோம். செயலாளன் என்ற முறையில் அவரை வரவேற்று மேடைக்கு அழைத்துக் கொண்டு போனேன். மேடைக்குப் போகும் படிகளுக்கு அருகில் சென்றதும் நான் சற்று விலகி நின்ற வண்ணம் மகாராஜா அவர்களை மேலே போகச் சொல்லி கை காட்டினேன். நான்தான் முதலில் படிகளில் ஏறி அவரை மேலே அழைத்துப் போய் உட்கார வைக்க வேண்டும் என்கிற பண்பாடு எனக்குத் தெரியவில்லை.

அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலுடன் மெல்லிய குரலில், “நீங்கள் முதலில் போங்கள். பின்னோடு நான் வருகிறேன். அதுதான் முறை?” என்றார், மகாராஜா. இதை ரொம்பவும் நாசூக்காக என்னிடம் எடுத்துச் சொன்ன உயர்ந்த பண்பை நான் எண்ணி எண்ணி வியந்ததுடன் என் டயரியிலும் குறித்து வைத்துக் கொண்டேன்.

விழாவைத் தொடங்கி வைத்ததும் மகாராஜா மேடையை விட்டுக் கீழே இறங்கி எதிரில் போய் அவருக்கெனத் தனியாகப் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வாரியார் சொற்பொழிவைக் கேட்க விரும்பினார். இப்போது இன்னொரு சின்ன சங்கடம் ஏற்பட்டது. மைசூர் மகாராஜாவை மட்டும் தனியே நாற்காலியில் உட்கார வைப்பது எப்படி? அவருக்குப் பக்கத்தில் தகுதியுள்ள ஒருவரைப் பேச்சுத் துணைக்கு உட்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/9&oldid=1145651" இலிருந்து மீள்விக்கப்பட்டது