பக்கம்:பழைய கணக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெள்ளி மணி பிறந்த கதை

சிரியர் கல்கி தலையங்கம் எழுதுவது வியாழக் கிழமைகளில்தான். விரல்களால் கீழ் உதட்டைச் செல்லமாய்த் தேய்த்துக் கொண்டே எழுதுவது அவர் வழக்கம். அப்படி எழுதுகிறார் என்றால் கற்பனை அபாரமாக ஓடுகிறது என்று அர்த்தம்! மார்பை நிமிர்த்தியபடி மேஜை முன் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விட்டால் அவர் எதிரில் யானையைக் கொண்டு போய் நிறுத்தினாலும் அவர் கண்ணில் படாது!

அவர் தலையங்கம் எழுதும் நாட்களில் நான் காலை எட்டு மணிக்குள்ளாகவே அலுவலகத்துக்குப் போய் விடுவேன்.

எழுதுகிற தலையங்கத்தை ஒவ்வொரு ஷீட்டாக மேஜை மீது வைத்துக் கொண்டிருப்பார். இரண்டு மூன்று ஷீட் சேர்ந்ததும் அவற்றை எடுத்துக்கொண்டு போய் ஃபோர்மென் ராஜாபாதரிடம் கொடுப்பேன். பிரஸ்ஸுக்குப் போவதற்குள்ளாகவே அந்த ஷீட்டுகளைப் படித்து விடுவேன். எழுதிய மை உலர்வதற்கு முன்பே, கல்கியின் எழுத்தைப் படித்து விடுவதில் எனக்கு அப்படி ஓர் ஆர்வம். எனக்கு மட்டுமல்ல, எல்லா உதவி ஆசிரியர்களுக்குமே.

நான் நவகாளி யாத்திரை எழுதி முடித்த சில நாட்களுக்குள் கல்கியை விட்டுப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம், அல்லது துரதிருஷ்டம் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் செய்த ஒரு சிறு பிழை காரணமாக அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். (அது என்ன பிழை? அது என்ன கோபம்? என்பது எங்களிருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.) அப்படிப் பேசாமல் என்னை தண்டித்த அந்தக் கொடுமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் ராஜினாமாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/95&oldid=1146081" இலிருந்து மீள்விக்கப்பட்டது