பக்கம்:பழைய கணக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இந்தச் சமயம் டெலிபோன் மணி அடித்தது. சின்ன அண்ணாமலை போனை எடுத்துப் பேசினார். அந்த முனையில் கல்கி.

“நீங்க இங்கே வந்துட்டுப் போக முடியுமா?” என்று சின்ன அண்ணாமலையைக் கேட்டார்.

அடுத்த கணமே சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கக் கிளம்பி விட்டார். அவர் திரும்பி வருகிற வரை தமிழ்ப்பண்ணையிலேயே—மசாலா தோசை தருவித்துச் சாப்பிட்டுவிட்டு—காத்திருந்தேன்.

சி. அண்ணுமலை திரும்பி வந்ததும், “கல்கி என்னய்யா சொன்னார்?” என்று கேட்டேன்.

“என்னை 'தீபம்’னு மாதப் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கச் சொல்கிறார், நீர் கல்கியை விட்டு விலகிவிட்ட செய்தியையும் சொன்னார்” என்றார்.

“அப்படியா? அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறீங்க? தீபம் ஆரம்பிக்கப் போறீங்களா, இல்லை, வெள்ளி மணி ஆரம்பிக்கப் போறீங்களா!”

“வெள்ளி மணி வாரப் பத்திரிகை. அதுக்கு நீங்க ஆசிரியர். தீபம் மாதப் பத்திரிகைதானே? அதுக்கு நான் ஆசிரியர். இரண்டுக்குமே டிக்ளரேஷன் வாங்கிடுவோம்” என்றர் சி. அ.

கல்கியின் விரோதத்துடன் வெள்ளி மணியைத் தொடங்கவோ நடத்தவோ எனக்கு விருப்பமில்லை. அவருடைய முழு ஒத்துழைப்பும் ஆசியும் இதற்கு ரொம்ப முக்கியம் என்று நான் கருதியதால், கல்கி, ராஜாஜி, டி. கே சி. மூவருடைய வாழ்த்துக்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகே வெள்ளி மணியை ஆரம்பித்தேன். அவர்கள் எழுதித் தந்த வாழ்த்துக்களை அப்படியே பிரசுரித்து, அட்டையில் டி. கே சியின் படத்துடன் முதல் இதழைக் கொண்டு வந்தேன்.

கல்கிக்கு இது ஒரு துணைப் பத்திரிகை போல் நடக்கும் என்று ஒரு குறிப்பும் அந்த இதழில் வெளியிட்டிருந்தேன்.

வெள்ளி மணிக்குத் தமிழ் வாசகர்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் கண்டதும் கல்கிக்கு என் மீது இருந்த கோபம் அடியோடு மறைந்து போயிற்று.

“பேஷ், பேஷ்! முதல் இதழே ரொம்பப் பிரமாதம் ரொம்ப காலமாக நடக்கும் பத்திரிகை மாதிரி இருக்கிறது” என்று என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/97&oldid=1146083" இலிருந்து மீள்விக்கப்பட்டது