பவள மல்லிகை 7
'பெரிய தெருவிலிருந்து வருகிறேன், தாத்தா” என்று கூசாமல் பதில் சொன்னுள். .
அவர் முகம் என் அப்படிச் சுளிக்க வேண்டும்? அவர் கை மெதுவாக மீசையைத் தடவிக் கொடுத்தது.
'போக்கிரிப் பெண்ணுய் இருக்கிருயே!” என்று கோபத்தோடு சொன்னர். -
அந்த வார்த்தை என் காதில் விழுந்தபோது எனக்கு என்னவோபோல் இருந்தது. அவள் அதைச் சட்டை பண்ணுமல் விறுவிறு வென்று மரத்தடிக்குப் போய் விட்டாள்.
என் மனசு சரியாக இல்லை. 'பாவம்! அந்தத் தாயில்லாப் பெண்ணிடம் சள்ளென்று விழுந்தாரே அவர்; என்ன காரணம்?’ என்று யோசித்து யோசித்துப் பார்க் தேன். அவரைத் தாத்தா என்று சொல்லி அழைத்தாளே, அதற்குத்தான் அவர் கோபம் கொண்டிருக்க வேண்டும் என்று ஊகித்தேன். பிள்ளை இல்லாதவர்கள் பல் விழுந் தாலும் இளமை கொண்டாடுவார்கள் என்று கேட்டிருக் கிறேன். அது நினைவுக்கு வந்தது. நான் அழுவதா, சிரிப்பதா? அம்புஜத்திடம் மாத்திரம் சொல்லி வைத்தேன்; ‘அவரை இனிமேல் தாத்தா என்று கூப்பிடாதே" என்றேன். منبعها . . . . . -
இன்னும் இரண்டு நாள் சென்றன. புழைக் கடைப் பக்கம் பூப்பறிக்க அம்புஜம் வேகமாகச் சென்றி - கொண்டிருந்தாள். அந்தப் பிராம்மணர் சட்டென்று அவளைப் பார்த்து, “ஏ குட்டி, என்ன அவ்வளவு சுதந்தரத் தோடு பாட்டுக்குப் போசிருயே. யாரைக் கேட்டுக் கொண்டு போகிருய்?' என்ருர், - - 'கல்யாணி மாமியைக் கேட்டேன், மாமா' என்ருள்
குழந்தை.