#60
பவள மல்லிகை
ளிைடம் சொன்னேன். அவனுக்கு ஒருவாறு என் ஆவல் புலப்பட்டது. -
“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில வருஷங்களுக்கு முன் அவர் வேறே எங்கோ போயிருந்தா ராம். கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவர் இங்கே வரவே இல்லை. பிறகு வந்தார். அது முதல் இப்படியே இருந்து வருகிருர், அதைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்ருல், அவருடைய பரமானந்த சிஷ்யன் ஒருவன் இருக்கிருன். எப்போதும் அவருடனே இருந்து பஜனைப் பத்ததியைக் கற்றுக்கொள்கிருன். அவனைக் கேட்டுப் பார்; எதாவது தெரியலாம்.'
ஒரு விஷயம் எளிதிலே புலகைாவிட்டால் அதைப் பற்றிய ஆராய்ச்சி அதிகமாகிறது. அந்த விஷயம் மர்ம முடையதாக, அருமையானதாகத் தோற்றுகிறது. கிருஷ்ணையர் வாழ்க்கையிலே ஒரு பெரிய மர்மம் இருப்ப தாக நான் ஊகித்தேன். அது சாமான்யமாக இராது; அவர் வாழ்க்கைப் போக்கையே மாற்றியிருக்க வேண்டும். நடராஜன் சொன்னன்:-அவன்தான் கிருஷ்ணைய ருடைய பரமானந்த சிஷ்யன்.-"இவருடைய பிள்ளே வேலையாக இருக்கிருன், போலீஸ் இலாகாவில் வேலை யாம். அவனைப்பற்றி இவர் மிகவும் பெரிய பெரிய கோட்டைகளை யெல்லாம் கட்டியிருந்தார். தம்முடைய பிற்கால வாழ்வை அவனுடன் கழிக்கலாம் என்று கினைத் துக் கொண்டிருந்தார். ஆனல் பகவான் இவரை இந்த ஊருக்கே உரியவராக ஆக்கியிருக்கும்போது, இவராக ஒன்று செய்ய முடியுமா ?” |
'ஏன் அப்படி ஆயிற்று ?’ என்று கேட்டேன். "இவருக்கு அவனிடத்தில் ஆசை. அவனுக்கு மனைவிமேல் ஆசை.'