உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவள மல்லிகை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாத்தக் கண்ணிர் 67

" இத்தனை பேர் இருக்கும்போது காட்டு மிருகங் களுக்குப் பயப்படவேண்டாம். நெருப்பு மூட்டினல் புலியோ சிங்கமோ நம்முடைய ய்க்கத்தில் வராது. வில் லும் அம்பும் கையில் இருக்கும்போது பயப்படக் கார ணமே இல்லை. அந்தத் தீவுக்கே போகலாம். இந்தக் கொந்தளிப்பில் நாம் கரை போய்ச் சேருவோம் என்ற நிச்சயம் இல்லை. தீவுக்குப் போவோம், அங்கே போய் எதையாவது செய்துகொள்ளலாம்.” -

நீலனுடைய கருத்தையே படகில் உள்ளவர்கள் ஆமோதித்தார்கள். படகு தீவை நோக்கிச் சென்றது. தீவு அருகில் வர வர அதன் உருவம் நன்ருகத் தெரிந்தது. மிகவும் உயர்ந்த மலையன்று. நெடுந் துளசத்திலிருந்து பார்த் தால் ஒர் யானே படுத்திருப்பது போலத் தோன்றியது. அதல்ை அதற்கு ஆனத் தீவு என்ற பெயரை வைத்திருக் தார்கள். அது வரையில் அங்கே யாராவது வந்திருக்கிருர் களோ, என்னவோ ? லேனும் அவனுடைய நண்பர்களும் . முதல் முறையாக இப்போதுதான் அவசியத்தால் அந்தத் தீவுக்கு வருகிருர்கள். . - . மும்பாதேவியின் பக்தர்களாகிய அவர்கள் அப் போது அந்தத் தேவியை வேண்டிக்கொண்டார்கள். நீலன் நடராஜப் பெருமானே வேண்டிக்கொண்டான். லேனும் மாணிக்கமும் தமிழ் நாட்டிலிருந்து வந்து மும்பையில் குடியேறின சிற்பிகள். நல்ல வீரர்கள். எதற்கும் அஞ் சாதவர்கள். சிற்பக்கலையில் வல்லவர்கள். .

மெல்ல மெல்லப் படகு தீவை அடைந்தது. அவர்கள் சந்தேகப்பட்டதுபோல எந்தத் துஷ்ட மிருகமும் அவர் களை வரவேற்க வந்த கிற்கவில்லை. ஜனங்கள் நடமாடின தற்கு அறிகுறியாகச் சட்டி பானே உடைசல்களும் கிழிசல் துணிகளும் அங்கங்கே கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/73&oldid=592098" இலிருந்து மீள்விக்கப்பட்டது