70 பவள மல்லிகை
- 32 - r
யானைத்தீவைப் பார்த்தது முதல் லேனுக்கு அத னிடம் இறுகலான பற்று எற்பட்டது. அவனும் மாணிக் கமும் உறவினர்கள். நல்ல உடல் வலிமை உடையவர்கள். தமிழ் காட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தைச் சார்ந்தவர் கள். பாம்பரை பரம்பரையாகக் கல்தச்சு வேலை செய்கிற வர்கள். பெரிய பெரிய மலைகளைக் குடையும் வேலைகளில் அவர்களுடைய முன்னேர்கள் ஈடுபட்டிருந்தார்கள். நாளடைவில் தமிழ்காட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை. வடக்கே நோக்கிப் புறப்பட்டார்கள். மும்பையில் வந்து தங்கினர்கள். இரண்டு தலைமுறைகளாக இவர்கள் வடநாட்டு வாசிகளாய்விட்டார்கள்.
கல்தச்சர்களானுலும் அவர்களுக்குள் சிலர் அருமை யான சிற்ப வேலையிலும் திறமை பெற்றிருந்தார்கள். கல் தூண்களில் பலபல நுண்ணிய வேலைப்பாடுகளைப் பொறித் துக் காட்டும் திறமை அவர்களிடம் இருந்தது. அத் தகைய சிற்பிகளே லேனும், மாணிக்கமும். சுறுசுறுப்பும் உழைக்கும் திறமையும் உள்ள யுவர்கள் அவ்விரண்டு பேரும்; எப்போதும் இணை பிரியாமல் இருப்பவர்கள்; கட்டிளங்காளே கள். - - - இருவரிலும் லேன் பிறப்பிலே கலைஞன் என்று சொல்வதற்குரியவன். கூலிக்கு வேலை செய்தால்கூட அவன் வேலை செய்யும்போது அதில் ஒன்றிப்போய். கிற் பான். அவ்வளவு உயர்தரமான கலைஞன் என்று மாணிக் கத்தைச் சொல்ல முடியாது. ஆனலும் அவனும் சிற்பக் கலைத் திறமை படைத்தவனே. - ... r
இந்தக் கூட்டத்தில் ஒரு மடமங்கை இள மானைப் போல் வளர்ந்து வந்தாள். தங்கம் என்பது அவளுடைய பெயர். தங்கம் அவள் கிறம். தங்கம் அவள் குணம். நீல