உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவள மல்லிகை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பவளமல்லிகை

பொருளாக எண்ணிப் பார்த்தார்கள். ஒரு சமயம் ஏதோ ஒர் ஊருக்குப் போனன். அங்கே ராஜ வீதியின் வழியே அசுவாரூடளுகச் சென்றுகொண்டிருந்தபோது, அரண் மனேயின் மேல் உப்பரிகையில் அந்த ஊர் ராஜகுமாரி கின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜகுமாரன் பஞ்ச கல்யாணிக் குதிரையின் மேல் இருக்கும் கோலத்தைக் கண்டு, அவள் சொக்கிப்போனுள். குதிரையின் ஜாஜ்வல்ய மான அழகும், அசுவபதியின் வீரத்தடங்கோளும் அவளே மயக்கின. அவனுடைய முகத்தின் அழகிலே அவள் உள்

ளம் சிக்குண்டது. தான் அவனைக் கவனிப்பதுபோலத்

தன்னையும் அவன் கவனிக்கவேண்டும் என்ற ஆச்ை அவ ளுக்கு உண்டாயிற்று. உடனே தன் கையில் இருந்த

தாமரை மலரை அரசகுமாரன் மேலே படும்படி வீசி எறிக்

தாள். ஒருவரும் கவனிக்காத சந்தர்ப்பம் பார்த்தே அப் படி எறிந்தாள். அது தன்மேல் விழுத்ததைக் கண்டு

அசுவபதி மேலே கிமிர்ந்து பார்த்தான். நல்ல அழகி

ஒருத்தி உப்பரிகையின்மேல் கின்றுகொண்டிருந்ததைக் கண்டான். அவள் தன் முத்துப் பற்கள் தோன்றும்படி புன்னகை பூத்தாள்; கண்ணைச் சிமிட்டினள். அரசகுமா சன் உடம்பு புளகம் போர்த்தது.

சிறிது கோம் குதிரையை அங்கேயே கிறுத்திவிட்

  • .

டான். நடுத்தெருவில் இப்படி நிற்பதும் மேலே பார்ப்பதும்

அபாயம் என்பதை அவனுக்கு உணர்த்துபவளேப்போல ராஜகுமாரி மறைந்துவிட்டாள்.

ராஜகுமாரன் அந்தப் பெண்ணின் மேலே ஞாபகமாக இருந்தான். அந்த ஊரில் ஒர் அம்மையார்க் கிழவி வீட்

டில் தங்கி, எப்படியாவது ராஜகுமாரியின் சிநேகத்தைப்

பெறுவதென்று தீர்மானித்தான். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தன் குதிரையின்மேல் எறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/96&oldid=592175" இலிருந்து மீள்விக்கப்பட்டது