பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


எனக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்” என்று பகலவனைப் பார்த்துக் கூறியது பனிக்கட்டி.

கதிரவன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டது. வீண் பெருமை பாராட்டும் பனிக்கட்டிக்குச் சரியான சூடு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டது. தன் கதிர்களைப் பனிக்கட்டியை நோக்கி நீட்டி விட்டது. நேரம் ஆக ஆகக் கதிர்கள் பனிக்கட்டியின் மீது பட்டு அதைத் துளைத்தன. கதிர்கள் படப் படப் பனிக்கட்டி கரைந்தது. மேலும் மேலும் கரைந்தது. கரைந்து கொண்டேயிருந்தது. கரைந்து கரைந்து மலைபோல நின்ற பனிக்கட்டி சிறு கூழாங்கல்போல ஆகி விட்டது.

அப்போது தான் பனிக் கட்டிக்கு அறிவு வந்தது.

கதிரவனின் காலில் விழுந்து வணங்கியது. "கதிரவனே! மன்னித்துவிடு, என்னை ஒரே யடியாகக் கரைத்து ஒழித்துவிடாதே! உலகில் நானும் வாழ இடங் கொடு” என்று கெஞ்சிக் கதறியது.