12
கதிரவன் இரக்கங் காட்டியது.
"பனிக்கட்டியே கேள். இனி நீ வெறும் ஆர்ப்பாட்டம் செய்யாதே! உலகில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவர்கள். எல்லாருக்கும் மேலாக நான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிடு. வீண் சண்டைக்கு வந்ததனால் உன்னை ஒழித்து விடநினைத்தேன். ஆனால், உன் அழுகையும், கெஞ்சலும் கண்டு மனம் இரங்குகிறேன். ஓர் ஆண்டில் நான்கு மாதம் மட்டும் நீ உலகில் நடமாட அனுமதி கொடுக்கிறேன். மீதி நாட்களில் இமயமலையின் மேல் போய்ப்படிந்து கொள். வெளியே தலைகாட்டாதே! உனக் கென்று ஒதுக்கப்பட்ட நான்கு மாதங்கள் பனிக்காலம் என்ற பெயரால் அமையும். அந்தக் காலத்தில் மட்டும் நீ உரிமையோடு உலகில் ஆட்சி செலுத்தலாம். மீதி நாட்களில் நீ அடங்கித்தான் கிடக்க வேண்டும். என்னையும் காற்றையும் எதிர்த்ததற்காக உனக்கு எட்டு மாத சிறைத்தண்டனை" என்று கூறிய கதிரவன் உச்சிநோக்கிச் சென்றது.