பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


அதற்குரிய தட்டில் வைக்கும் உணவைத் தான் தின்னும். வேறு பொருள்களில் வாய் வைக்காது. மாலையில் நான் வெளியில் செல்லும் போது கூடவே ஓடிவரும்.

நீண்டநாட்கள் அது எங்கள் வீட்டில் இருந்தது. ஒருநாள் நோயுற்றுப் படுத்தது; கால் நடை மருத்துவரிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். மருந்துகளால் அதை ஒரு வாரம் வரைதான் காப்பாற்ற முடிந்தது. பிறகு அது இறந்து போய் விட்டது.

அந்த நாய் இறந்த பிறகு, வீடே வெறிச் சோடிப் போன மாதிரி இருந்தது. இழப் புணர்வு என்னைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. என்னால் நீண்டநாள் இப்படி இருக்க முடியாது என்று தோன்றியது.

ஒரு நாள் பக்கத்து ஊருக்கு ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவன் வீட்டில் ஓர் உயர்ந்த சாதி நாய் இருந்தது. அது குட்டி போட்டிருந்தது. ஐந்து குட்டிகள். ஐந்தும் அழகான குட்டிகள். அவற்றை நான் விருப்போடு பார்த்துக் கொண்டிந்தேன். உடனே அந்த நண்பன், அதில் ஒரு குட்டியை மட்டும்