பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


இறைவன் மனிதர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்ததுபோல், நாய்களுக்குக் கொடுக்க வில்லை. அதிலும் அவை குறுகிய காலத்தில் இறந்து போகும்படியும் விதித்து விடுகிறான். அப்படித் தான். என் சிவாஜியும் தன் ஐந்தாவது வயதில் திடீரென்று நோய் உண்டாகி இறந்து விட்டது. சிவாஜியை இழந்து நான் தவித்த தவிப்பு சொல்லி முடியாது.

ஒரு நாள் அறிவழகன் என்ற என் நண்பன் வந்திருந்தான்.

சிவாஜி இறந்ததிலிருந்து மிக மெலிந்து விட்டாய். நீ வேறொரு நாய்வாங்கி வளர்க்கலாம் என்றான்.

“வளர்த்து வளர்த்துச் சாகக் கொடுப்பது பெரிய வேதனையாக இருக்கிறது. யாராவது வளர்த்து விற்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” என்றேன் நான்.

நண்பன் தேடிப் பார்த்துச் சொல்லுவதாகக் கூறிச் சென்றான்.