பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வியப்பாய் இருந்தது. கேட்ட விலையைப் பேரம் பேசாமல் கொடுத்தேன். அன்போடு அதன் முதுகில் தடவிக் கொடுத்தேன்.

அந்த வீட்டுக்காரர் நாயை அழைத்துக் கொண்டுவந்து என் வண்டியில் ஏற்றி விட்டார். நானும் ஏறிக் கொண்டேன். வண்டி புறப்பட்டது.

நாய் பின்பக்கம் திரும்பிப் பார்த்தது. நானும் திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்,

கதவோரத்தில் நின்ற அவர் மனைவி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.