பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27

மேலும் பேய்கள் இருந்ததாகக் கருதப்பட்ட பழைய காலத்தில் அவை மனிதர்களையோ மாட்டையோ அறைந்து கொன்றதாகத் தான் கேள்விப் பட்டிருக்கிறோம். கொத்தியதாகவோ,கால் சட்டையைப் பொத்ததாகவோ கேள்விப் பட்டதில்லை. ஆகவே இந்தக் கிழவர் சொல்லுவதை நம்பமுடிய வில்லை என்று அந்த ஊர்க் கிழவிகள் கூறினார்கள்.

ஆனால், அன்று முதல் யாரும் ஏரிக் கரைக்குச் செல்லவில்லை. பெர்ரிப் பழம் பறிக்கும் வேலை நடைபெற வில்லை. சந்தையில் பெர்ரிப் பழம் கிடைக்க வில்லை.

பேய் எனறதும் எல்லோரும் பயந்து விட்டனர். ஆனால் பேய்களுக்குப் பயப்படுவதாகச் சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வெட்கமாக இருந்தது. ஆகவே, ஏன் பெர்ரிப் பழம் பறிக்க ஏரிக்கரைக்குப் போக வில்லை என்று கேட்டால், இந்த ஆண்டு பெர்ரிப் பழம் விளைய வில்லை. பழம் விளைந்தால் அல்லவா பறிக்கப் போகலாம் என்று பதில் கூறினார்கள்.