பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28

ஆனால் இந்தச் செய்தி நாளிதழ் ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் செய்தியாளர்களை அந்தச் சிற்றுாருக்கு அனுப்பினார்கள். புரட்சி ஏற்பட்டு இருபது ஆண்டுகள் கழித்து முதன் முதலாகத் தோன்றியிருக்கும் பேயைப்பற்றித் தெரிந்து செய்தி கொடுப்பதற்காகச் செய்தியாளர்கள் அந்தச் சிற்றுாருக்குச் சென்றனர்.

பேயைக் கண்ட கிழவரை அவர்கள் பேட்டி கண்டார்கள். பேயை எங்கே கண்டார் என்று கேட்டார்கள். ஏரிக்கரையில் கண்ட தாகக் கூறினார்.

‘பேய் எப்படி இருந்தது” என்று கேட்டார்கள்.

“அது மனிதனைப் போலவும் இல்லை; பறவையைப் போலவும் இல்லை. அதன்குரல் பயங்கரமாக இருந்தது. அது விரட்டிக் கொண்டு வந்து என் காலைக் கொத்தியது. அது பாய்ந்து கொத்தியதில் என் கால் சட்டை பொத்தலாகிவிட்டது” என்றார் கிழவர்.

மறுநாள் செய்தியாளர்கள் கிழவரை யழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச்