பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

முதல் நாள் உடுத்திய ஆடையை மறுநாள் பயன்படுத்த மாட்டான். அவனுடைய பணம் முழுவதும் ஆடைக்காகவே செலவிட்டான். அவனுடன் நெருங்கிப் பழகுவோர், அவன் புதிதுபுதிதாகப் பூணும் உடைகளின் அழகைப் புகழுவார்கள். அவர்களுக்கு உடனே பரிசு, அல்லது பதவி கிடைக்கும்.

கோல புரிக்கு ஒரு நாள் மூன்று ஆட்கள் வந்தார்கள். ஏமாற்றிப் பிழைப்பதே அவர்கள் தொழில். நாடுநாடாகச் சென்று பெரிய மனிதர்களோடு பழகி அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்துப் பறித்துப் பழகியவர்கள்.

பத்தன், சித்தன், முத்தன் என்ற பெயருடைய அந்த எத்தர்கள் மூவரும் கோலபுரி ஊரைச் சுற்றிப் பார்த்தார்கள். அரசாங்க அதிகாரிகள், மக்கள் ஆகியோரிடம் அந்த அரசனைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள்.

ஆடைப் பைத்தியம் பிடித்த அரசனை ஏமாற்றிப் பணம் பறிக்க ஒரு திட்டம் தீட்டினார்கள்.