உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அந்த எத்தர்கள் அரசனிடம் ஆயிரம் பொன் அச்சாரமாக வாங்கிக் கொண்டார்கள். அன்றே கடைத் தெருவுக்குச் சென்று ஒரு கைத்தறியும், ஒரு தையற் பொறியும், ஓர் அடுப்பும், சாயங் காய்ச்சுகிற பானையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக் கென்று ஒதுக்கப்பட்ட கூடத்தில் இவற்றைக் கொண்டு வந்து இறக்கினார்கள்.

முதல் இரண்டு நாட்கள் பித்தன் கைத்தறியில் நூல் இல்லாமலே வேலை செய்து கொண்டிருந்தான். சித்தனும் முத்தனும் உதவி புரிவதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தனர்.

அடுத்த இரண்டு நாளும் சித்தன் தையற் பொறியை ஒட்டிக் கொண்டிருந்தான். துணியில்லாமலே, தையற்பொறி வேலை செய்து கொண்டிருந்தது. பித்தனும் முத்தனும் தூக்கிப் பிடித்துக் கொள்வது, போலவும் எடுத்துக் கொடுப்பது போலவும் நடித்துக் கொண்டிருந்தனர்.

மற்ற இரண்டு நாட்களும், முத்தன் சாயப்பானையில் தண்ணீர்ஊற்றிக் கொதிக்க