பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


வைத்துக் கொண்டிருந்தான். வெறுங்கையினால் துணியைச் சாயத்தில் நனைப்பது போலவும் காயப் போடுவது போலவும், பாசாங்கு செய்து கொண்டிருந்தனர்.

ஏழாவது நாள் மன்னன் வண்ணங்கி தனக்காக உருவாகியுள்ள ஆடையைப் பார்த்துவரப் புறப்பட்டான். அரசமண்டபத்திலிருந்து இரண்டுபடி கீழிறங்கிய பிறகுதான், மன்னனாகிய தானே போவது தன் தகுதிக்கு ஏற்றதல்ல என்று எண்ணித் தன் அமைச்சர்களில் ஒருவரைக் கூட்டிவரும்படி ஆளனுப்பினான்.

அந்த அமைச்சர் போய்ப் பார்த்துவந்தால் ஆடையைப் பற்றி அறிந்து கொள்வதோடு, அவர் கடமை தவறாதவரா? அறிவாளியா என்பதையும் ஐயமறத் தெரிந்து கொள்ளலாமே என்று அரசன் எண்ணினான்.

அரசன் கட்டளைப்படி அமைச்சர் புதிய ஆடையைப் பார்த்துவரப் புறப்பட்டார்.

அமைச்சர் தங்கள் கூடத்தை நோக்கி வருவதைக் கண்ட எத்தர்கள் எச்சரிக்கை-