பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

மென்மையான பட்டுத்துணி யிருப்பதுபோலவும், அதை மிகப் பக்குவமாக எடுப்பது போலவும் நடித்தான் பத்தன். அதைவிரித்துப் பிடிப்பதுபோல் நடித்தான் சித்தன். அதை அரசருக்கு அணிவிப்பது போல நடித்தான் முத்தன். பிறகு மூவரும் சேர்ந்து அங்கங்கே

சுருக்கங்களை நீக்கி யிழுத்து விடுவதுபோலவும், உடலில் பொருத்தி விடுவது போலவும் அபிநயங்கள் செய்தனர். அப்போது முதல் நாள் ஆடையைப் பார்க்கச் சென்ற அமைச்சர் உள்ளே நுழைந்தார். அம்மணமாக இருக்கும் அரசரைப் பார்த்தார். கடமையைச் சரியாகச்

பா—4