பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர் ஒன்றில் அரசன் நின்று கொண்டான். அமைச்சர்கள் படை வீரர்கள், அரண்மனை யாட்கள் தொடர தேர் புறப்பட்டது. வீதிகளில் மக்கள் வெள்ளம் வெள்ளமாகக் கூடியிருந்தார்கள்.

அம்மணக் கோலத்தில் அரசன் தேர்த்தட்டின் மீது நின்றபடி ஊர்வலம் வந்தான். பார்த்த ஒவ்வொருவரும், தான் அறிவற்ற முட்டாளாய் இருப்பதாலோ, கடமை தவறியதாலோ அரசனின் ஆடை தன் கண்ணுக்குத் தெரியவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், தன்னை முட்டாளாக வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, “மன்னர் இந்த ஆடையில் மிக அழகாக இருக்கிறார்!" என்று ஒவ்வொருவனும் பக்கத்தில் இருப்பவனிடம் சொன்னான். பக்கத்தில் இருப்பவனோ, அவனுக்கு அழகாகத் தோன்றும் அரசர் தனக்குமட்டும் அம்மணமாகத் தோன்றுவதால் தன்னை முட்டாளாக எண்ணிக் கொண்டான். ஆனால் தன்னைத்தானே முட்டாள் என்று சொல்லு-