பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வது சரியல்ல என்று அவனும், “ஆம்! ஆம்! மிகமிக அழகாக இருக்கிறார்!" என்று கூறினான்.

இவ்வாறு ஆண் பெண் அனைவரும், அம்மணக் கோலத்தில் ஊர்வலம் வரும் அரசனைப் பார்த்து, அவன் ஆடையின் அழகைப் பாராட்டுவதாகப் போலித் தனமாகப் பாராட்டிப் பேசிக் கொண்டனர்.

முதல் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் தேர் வந்தது. முதலமைச்சரின் மனைவி, அரச ஊர்வலத்தைப் பார்ப்பதற்காகத் தன் குழந்தையுடன் உப்பரிகையின் மீது வந்து நின்றாள். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். சுடர்க்கொடி என்ற பெயருடைய அந்தப் பெண்குழந்தை சுட்டித்தனத்துக்கும் சுறுசுறுப்புக்கும், அறிவுநுட்பத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. ஐந்து வயதில் அது கேட்கும் கேள்விகள் அறிவுக்கு விருந்தாய் இருக்கும்.

சுடர்க் கொடி உப்பரிகையின் மீது வந்து நின்றதும் அரச ஊர்வலத்தை நோக்கினாள்.