பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவலைக்கு மருந்து


தங்கபுரி என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் வளவனார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். வளவனார் சிறந்த பண்புநலம் உடையவர்; பெருஞ் செல்வர்; நல்ல அறிஞரும்கூட. தங்கபுரியில் அவர் செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்து வந்தார்.

வளவனார் உழைப்பினால் உயர்ந்தவர். சிறுவயதில் பாடுபட்டு உழைத்துப் பெருஞ்செல்வராக முன்னுக்கு வந்தவர்.

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். அதேபோல் உயர்ந்த இன்ப வாழ்வையும் அடைந்தவர்.

வளவனார், சுறுசுறுப்பானவர்; நல்ல உழைப்பாளி. அதனால் அவர் நோயென்று படுத்ததே கிடையாது.