பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


பல வகையான பழக்க வழக்கங்கள் உடைய மக்கள் அனைவரோடும் பழகினான். ஆங்காங்கேயுள்ள அழகிய, விந்தையான பல காட்சிகளையும் கண்டுமகிழ்ந்தான். ஆடம்பரமான உணவு விடுதிகளில் தங்கினான்.

ஒவ்வொரு நாட்டிலும் தனக்குப் பிடித்தமான ஊர்களில், மனை வாங்கி அழகான பெரிய மாளிகைகளைக் கட்டினான். அந்த மாளிகைகளைச் சுற்றி அழகிய பூங்காக்களை அமைக்கச் செய்தான். தான் எப்பொழுது சென்றாலும் வரவேற்கக் கூடிய மேற்பார்வையாளர்களை ஏற்படுத்தினான். ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் அவனுடைய மாளிகைகள் இருந்தன.

கடைசியில் அவன் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தான்.

தந்தை அவனை அன்போடு வரவேற்றார். அவனுடைய உலகப் பயணம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் மகன் விரிவாகக் கூறக்கேட்டு மகிழ்ந்தார்.