பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


“மகனே, உண்மையான நண்பர்கள் எத்தனை யெத்தனைபேர் இருக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை ஒருவன் கவலையற்றவனாக வாழமுடியும்.

“எனவே, மகனே இனிமேலாவது நல்ல நண்பர்களைத் தேடிக்கொள். நண்பர்களின் வீடுகள்தான் உனக்குச் சரியான புகலிடங்கள் ஆகும்” என்று சொல்லி முடித்தார் தந்தை.

அப்பொழுதுதான் மகன் அவருடைய அன்பு உள்ளத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டான்.

அவனுடைய எதிர் காலம் சிறப்பாக அமைந்தது.