பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


“அப்பாடா! கடைசியாக நல்ல உணவு கிடைத்தது. பசிக்கவலை விட்டது!” என்று முள்ளம் பன்றி கூறியது.

“என்ன சொல்லுகிறாய்? சரியாகக் கேட்கவில்லையே!” என்று அதன் காலில் சிக்கிக் கொண்ட பொன்வண்டு கேட்டது.

“நன்றாகப் பாடுகிறாய்! ஆனால் தொடர்ந்து உன் பாட்டைக் கேட்க இந்தக் காட்டுக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இன்னும் சிறிது நேரத்தில் நீ என் வயிற்றுக்குள் போகப் போகிறாய்!” என்றது முள்ளம் பன்றி.

முட்டாள் தனமாக இந்த முள்ளம்பன்றியிடம் சிக்கிக் கொண்டோமே என்று வருந்தியது பொன்வண்டு. அதன் மூளையில் ஒரு புது வழி தோன்றியது.

“முள்ளம் பன்றியே, என் இசையைப் பாராட்டியதற்கு நன்றி. அதற்காக நான் உனக்கு ஓர் உதவி செய்ய விரும்புகிறேன்” என்றது பொன் வண்டு.