பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


வறுத்துத்தரச் சொன்னால் அவன் என்னையே வறுத்து விடுவான்” என்றது முள்ளம் பன்றி.

“முள்ளம் பன்றியே! அதோ ஒரு குடிசை தெரிகிறது பார்த்தாயா! அது விறகு வெட்டியின் குடிசை. விறகு வெட்டி இப்போது மரம் வெட்டப் போயிருக்கிறான். அவன் குடிசைக்குச் செல். அங்கே அடுப்பில் இரும்புச் சட்டி இருக்கிறது. அதில் என்னைப் போட்டு வறுத்துச் சாப்பிடு! நான் உனக்குச் சுவையான உணவாகும் மகிழ்ச்சியோடு சாகிறேன். ஒரு முறை வறுத்துச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், பிறகு நீ எதையும் அப்படித்தான் சாப்பிட ஆசைப் படுவாய்!” என்றது பொன் வண்டு.

முள்ளம் பன்றிக்கும் சுவையான சாப்பாடு சாப்பிட ஆசை உண்டாகியது. பொன் வண்டை ஒரு காலில் இடுக்கிப் பிடித்தபடியே விறகுவெட்டியின் குடிசைக்குச் சென்றது குடிசைக் கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றது. அடுப்பின் அருகில் இரும்புச் சட்டி இருந்தது. அதை

பா- 5