பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

 எடுத்து அடுப்பின் மேல் வைத்தது. அந்த இரும்புச் சட்டியில் பொன்வண்டைப் போட்டது.

“இனி என்ன செய்ய வேண்டும்?" என்று முள்ளம் பன்றி கேட்டது. அதோ விறகு அடுக்கி வைத்திருக்கிறான். இரண்டு விறகை எடுத்து அடுப்பில் வை. பக்கத்தில் உள்ள அலமாரியில் தீப்பெட்டி இருக்கிறது. அதில் ஒரு குச்சி எடுத்து உரசு. விறகு எரிந்ததும் இரும்புச்சட்டி சுடும், நான் வறுபடுவேன்.

“சிறிது உப்பை எடுத்து என்மேல் தூவி விட்டுத் தின்று பார்! அந்தச் சுவையை நீ மறக்கவே முடியாது” என்றது பொன் வண்டு.

முள்ளம் பன்றி அது சொன்னபடி செய்தது. இரண்டு விறகுகளை எடுத்து அடுப்பில் செருகியது. தீப்பெட்டியை எடுத்து வந்தது. குச்சியை உரசியவுடன் நெருப்பு வந்தது. அதை விறகில் வைத்தது. விறகு தீப்பிடித்து எரிந்தது. சட்டி சுட்டு விட்டதா? என்று தொட்டுப் பார்த்தது. பொன்வண்டு