பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் பரிசுஅண்ணாமலை என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் நல்ல கெட்டிக்காரன். பாடம் நன்றாகப் படிப்பான். விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவான். நல்ல குரல். பாட்டுப் பாடுவதிலும் சிறப்பாகத் திகழ்ந்தான்.

அவனுடைய வீட்டில் எல்லோருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். அப்பாவும் அம்மாவும் கல்லூரிப் பேராசிரியர்கள். இருவருமே மிஞ்சிய நேரத்தில் சமுதாயத் தொண்டு செய்து வந்தார்கள்.

அண்ணாமலையின் அக்கா கல்லூரியில் பொருளாதார வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.