பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சங்கரன் அந்த நோட்டை வாங்கினார்: சுக்கல் சுக்கலாகக் கிழித்தார். குப்பைக் கூடையை நோக்கி வீசினார்.

"நீ சோம்பேறியாக மட்டும் இல்லை; பொய்யனாகவும் மாறி விட்டாய்!” என்று பெருந்துயரத்தோடு கூறினார். அப்படியே மயக்கம் போட்டுச் சாய்ந்து விட்டார்.உடனடியாக மருத்துவருக்கு ஆளனுப்பி, அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க ஐம்பது ரூபாய் செலவாயிற்று.

கணபதி அந்த ஐந்து ரூபாயை உழைத்து ஈட்டவில்லை. தன் மாமாவிடம் இலவசமாக வாங்கி வந்தான். அறுவடை செய்ய வேண்டிய காலத்தில் நாற்றுகட்டதாகப்பொய் சொன்னால் தந்தை எப்படி நம்புவார்! அதனால்தான் கிழித்து எறிந்தார்.

சில நாட்கள் கழிந்தன. மீண்டும் கணபதி அப்பாவிடம் வந்தான். அப்போது அவன் கையில் ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது.

"அப்பா, உண்மையில் நான் உழைத்துத் தேடிய பணம் இது. வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினான்.