பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

சங்கரன் அவனைக் கூர்ந்து நோக்கினார்.

“கட்டிடங்கட்டும் இடத்தில் செங்கல் தூக்கிக் கொடுத்துக் கூலியாக வாங்கி வந்த பணம் இது” என்றான் கணபதி.

சங்கரன் அந்த நோட்டை வாங்கி அப்படியே கிழித்துக், குப்பையில் போட்டார். உண்மையில் அந்தப் பகுதியில் யாரும் அப்போது கட்டிடம் கட்டவில்லை. தந்தையின் நண்பர் ஒருவரிடம் கணபதி கெஞ்சி வாங்கிய பணம் அது.

"இனி உன்னை நான் நம்ப மாட்டேன். என்னிடம் வராதே" என்று கடுமையாகச் சொன்னார் சங்கரன். இவன் எப்படிப்பிழைக்க போகிறான் என்ற எண்ணமே அவரை மேலும் நோய்க்கு உள்ளாக்கியது.

பத்து நாள் கழித்து மீண்டும் கணபதி சங்கரன் அறைக்கு வந்தான். அப்போது அவர் உடல் நிலை மிகவும் கவலைக் கிடமாய் இருந்தது.