பக்கம்:பாசம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாசம் : இது ஒரு தனி மனிதன் உடைமையன்று; எல்லாருக்கும் பொது. ஏன்?-எல்லா உயிர்களுக்கும் பொது என்றுகூடச் சொல்லலாம். ஒரறிவுயிராகிய புல் மரம் தொடங்கி, ஆறறிவுடைய மனிதன் வரையில் இப் பாசம் பற்றி கிற்கின்றது. - பாசம் கால எல்லையைக் கடந்தது. உலகம் தோன் நிய அந்தநாள் தொட்டு-மாத்தைப்பற்றிக் கொடி படா ஆரம்பித்த அந்த நெடுக்கொலை நாள் முதல்-மனிதனுகிய ஆதாம் ஏவாளைப் பாசத்தால் நோக்கிப் பற்றிய அந்த நாள் முதல்-ஏன் அதற்கு முன் உலகில் உயிரினம் உண் டான அந்தக் காலம் முதல்-பாசம் வாழ்ந்துதான் வரு கின்றது. உலகம் உள்ளளவும் இப்பாச உணர்ச்சி மறை யாது-மடியாது-மங்கி உருக்குலையாது. பாசம் என்பதுதான் என்ன ? அது உள்ளத் து உணர்வா உடல் தோற்றமா ? இரண்டும் கலந்ததா? அல்லது உதட்டு வேதாங்கமா ? இன்றைக்கு மனிதன் உள்ளத்தை விட்டுவிட்டு உதட்டளவில் வாழ்வை அமைத்துக் கொண்டான் என்பது உண்மைதான். ஆனல் பாசம் அந்த வாண்ட பாலையிலும் தொலைவில் தோன்றும் ஊற்று நீரெனப் பற்றிக்கொண்டிருக்கின்றது. நேரிய முறையில் மட்டுமன்று மாறுபட்டமுறையிலும் சிட்ட இந்திய நாட்டுக்கு ரஷ்யத் தலைவர்கள் வந்து கோவா’ இந்திய நாட்டுப் பகுதியே என்று கூறியதும் போர்ச்சுக்கல்லிடம் அமெரிக்காவுக்குத் திடீரெனப் பாசம் உண்டாகும் நாகரிக நாளில் நாம் வாழ்கின்ருேம். யாரும் இதுபற்றிக் கேட்காத முன்பே தானே திடீரெனக் கொண்ட பாசத்தின் காரணமாக அமெரிக்க டல்லஸ்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/3&oldid=810293" இலிருந்து மீள்விக்கப்பட்டது