பக்கம்:பாசம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சொரியும் பசுவின் கில்ே எதைக் காட்டுகின்றது? மக் களைக் கொல்லும் புலி முதலிய கொடிய விலங்குகளும் தத் தம் குழந்தைகளாகிய குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க்கின்றனவே அதன் அடிப்படைதான் என்ன? இன்னும் எத்தனே எத்தனையோ கேள்விகளை அடுக்க லாம். எல்லாவற்றிக்கும் ஒரே பதில்தான். ஆம்! அது தான் பாசம்-பாசம்-பாசம் என்பது. அப் பாசத் தால்தானே வையகம் இன்னும் வாழ்கின்றது. பாசம் இன்றேல் கூட்டு வாழ்க்கை யேது கூட்டு வாழ்வு இன்றேல் உயிரினம் இத்துணை வகையில் வளர முடி யாதே ! மனிதன்தான் எப்படி இந்த ஒன்றிய சமுதா யத்தை அமைக்க முடியும் ? 3. இந்தப் பாசம் பலவகையால் பெயர் பெறுகின்றது. பெரியோர் சிறியோரிடம் செலுத்தும் நல்ல பாசத்தை அருள் என்றும் தயவு என்றும் அன்பு என்றும் கூறுகின் ருேம். சிறியோர் பெரியோரிடம் செலுத்தும் பாசத்தைப் பக்தி என்கிருேம். ஒத்தாரிடம்சென்று பற்றும் பாசத்தை நட்பு என்று கொள்கின்ருேம். எனவே, பாசம் பல வகை களில் உயிர்ப் பொருள்களைப் பற்றிக்கொள்கின்றது. இப்பாசத்தால் ஒருசிலர் தம் வாழ்வையே தியாகம் செய்து கொள்கின்றனர். தம் கடமை, கொள்கை முதலிய வற்றையும்கூடத் துறந்து பாசத்தின் வழிச்செல்லு கின்றனர். தமிழ் நாட்டுச் சமய நெறி போற்றிய திரு நாவுக்கரசையும் அவர் தமக்கையராம் திலகவதியாரையும் அறியாதார் யார் திலகவதியார் கணவன் மாண்டதும் உயிர்விடத் துணிந்தார். எனினும் அத் தம்பியார் தான் இறந்தால் உடன் இறப்பதாகக் கூறினமையால் தம்பியார் பொருட்டுத் தாம் கொண்ட கொள்கையை விடுத்தும் பாசம்பற்ற, அத்தயவுளத்தால் வாழ்ந்தார். - 'தம்பியா உளராக வேண்டுமென வைத்த தயா உம்பர் உலகு அடைய உறும் கிலேவிலக்க உயிர்தாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/5&oldid=810297" இலிருந்து மீள்விக்கப்பட்டது