பக்கம்:பாசம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 காணப் புறப்பட்டுவந்த வரலாறு இது. தன் காட்டு மன்னனும் மற்றவரும் வேண்டாம் என்று தடுத்து கிறுத் திய போதிலும், புத்தர் பிறந்த நாட்டைக் காணவேண்டு மென்ற ஒரே பேராவல் உந்த, ஒருவரும் அறியா வகையில் புறப்பட்டு வந்து, இந்த நாடு முழுவதும் சுற்றிச் சென்ற அப் புத்தத் துறவியின் வரலாற்றில் சில பகுதிகள் இங்கு நாடகமாக்கப் பெற்றுள்ளன. யுவான் சுவாங் நம் காட்டைப் பற்றி எழுதி வைத்த பெருங் குறிப்பு அந்தக் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் நம் நாடு இருந்த கிலேயை நன்கு விளக்கிக் காட்டுகின்றது. அந்த வரலாற்றையெல்லாம் அறிய வாய்ப்பளித்த அவர் செயல் எண்ணி மகிழும் அதே வேளையில், அவர் தங்கி வாழ்ந்த காலந்தா பல்கலைக் கழகம் போன்ற அறிவு கிலேயங்கள் மண்மேடிட்டு மறைந்ததை எண்ண மனத் தில் வேதனேயும் பிறக்கத்தான் செய்கின்றது. யுவான்சுவாங் தமிழ் நாட்டிலேயும் வந்து சில காலம் தங்கி, இந்நாடு பற்றியும் தன் குறிப்பில் தங்துள்ளான். அவன் குறிப்பு இந்திய நாட்டு வரலாற்றில் சிறந்த இடம் பெற்றுள்ளது. அவனது சீன எழுத்தினே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர் அறிஞர்கள். உயர்ந்த செல்வக் குடும்பத்தில் பிறந்து, முன்னேர் தழுவியிருந்த கன்பூவியர் சமயத்திலிருந்து பெளத்த ராகி, இந்நாடு வந்து, பல இன்னல்களை வழியிலும் இங்கும் அனுபவித்து, வேண்டிய குறிப்புக்களைத் தேடிப் பெற்றுப் பெரும் தொண்டாற்றிய அவர் செயலெல்லாம் அவர் புத்தரிடம் கொண்ட பெரும் பாசத்தையன்ருே விளக்கு கின்றன. அவரது முயற்சி அன்றும் இன்றும் நன்கு பயன் அளித்து வருகின்றது. வேண்டாம் என்று தடுத்த சீன நாட்டு மன்னன் அவர் கிரும்பியதும் அவருக்குச் செய்த சிறப்பை எண்ணின் அவரது பெருமை நன்கு விளங்காமல் போகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/7&oldid=810301" இலிருந்து மீள்விக்கப்பட்டது