பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஜாக்சன் சந்திப்பு 99

மார் முதலானவர்களையும் அழைத்துக்கொண்டு நீர் பாஞ்சைப் பதிக்குப் போம்” எ ன் அறு இவர் வாஞ்சையுடனுரைத்தார். கேட்டபிள்ளை வாட்டமுற்று அரசே! தனியாகச் செல்வது சரி அன்று, தானேயோடு தான் ஏகவேண்டும்; தங்களைத் தனி யேவிட்டு நான் என்னமாப் போவேன்?' என இன்னலோடு உரைக்கார் சிங்க ஏறு எங்கே போயினும்என்? எந்த மிருகமும் அதனை என்ன செய்யமுடியும்? காட்டிலிருந்தாலும் காட்டில் நின்ருலும் என்னை யார் வெல்ல வல்லார்? இவன் என்னதான் செய்கிருன் என்பதைத் தன்னந்தனியே போய்த்தான் நான் அறிந்துவர வேண்டும்; நீர் யாதும் வருந்தவேண்டாம்; பரிவா ரங்களுடன் நம் திருககர்க்கே போம்” என மன்னன் உறுதிபெற வுரைத்தும் பிள்ளை இசையவில்லை. பின்பு குற்ருலத்திலேயே இருதினங்க ளிருந்து அருவி நீராடி இறைவனைத் தொழுது எல் லாரும் சேர்ந்து உல்லாசமாகச் சொக்கம்பட்டிக்கே சென்ருர். அது ஒரு ஜமீன்தார் இருக்கும் ஊர். கும்ருலத்திலிருந்து 12 மைல் அாரமுள்ளது. அங்குப் போனவுடன் துபாவிப்பிள்ளை வந்து, 'துரை சிவகிரிக்குப் புறப்பட்டுவிட்டார்; உங்களை அங்கே வரச் சொல்லியிருக்கிருர்’ என்ருன். தேச பாஷையை மொழிபெயர்த் துத் துரைக்குச் சொல்லி, துரையின் கருத்தை வந்தவர்க்கு உரைக்கும் செயலினனை அவன் அங்கனம் சொல்லி நீங்கிய பின் தானுதிபதிப் பிள்ளைக்குக் கோபம் வந்தது. இனி இந்த வெள்ளை மனிதன் பின் செல்லலாகாது; நம் ஊருக்கே போக வேண்டும்; பாருக்குள் உயர்ந்திருக்கும் சமுகம் நேருக்கு கேர் வந்தும், யாருக்கு வந்த விருந்தோ என இவன் அவமதித்து கிம் கின்ருன். பெருங் ககையே திரும்புங்கள்’ என்ருர். பிள்ளை இங்ங்னம் உள்ளம் வருந்தி உரிமையோடு சொல்லவும் மன்னர் அவரை மறுத்து மொழிக்கார். "இங்கிருந்து திரும்பிப் போனல் பயந்து போய்விட்டான்; தன் சொந்த இடத்திலன்றி அயலி டத்தில் இவல்ை யாதும் செய்ய முடியாது; செயலிழந்தவன்'

என மயலுழந்து நம்மை இவன் எளிதாக எண்ணுவன் ஆதலால்