பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வெளியே போனன். போகவே நம் தளபதியாகிய கிளார்க் (Lieutenant and Adjutant Clarke) Gai suoru o ĝGu L/G# s அவனே இடைமறித்தான். மறித்த அவனே மறுத்து ஒன்றும் சொல்லாமல் கன் கையிலிருந்த கட்டாரியால் அக் கட்ட பொம்மு கடுத்துக் குத்தினன். குத்து மார்பின் வலப்புறத்தில் மடுத்துப் பாயவே அவ்விடத்திலேயே வீழ்ந்து அவன் துடித்து இறந்தான். அடுத்திருக்க அவன் படைகளும் கொடுத்துப் புகுக் தன. பாதுகாப்பிற்காக வைத்திருந்த நம் பட்டாளங்களும் பரிந்து வந்தன. பெருங் கலகம் மூண்டது. பலர் மாண்டனர். பின்பு அனைவரும் பறந்து போயினர். அக் கொடியவன் குதி ரையிலேறிக் கானையோடு கருக்கிப் போஞன். தானுபதி மட்டும் அகப்பட்டான். அவனைப் பிடித்துச் சிறைப்படுத்தி யிருக்கி றேன். கட்டபொம்மு என்னும் துட்டனேக் கொட்டம் அடக்கி அடியோடு கொலேத்து ஒழிக்காவிடின் நம் கும்பினி ஆட்சி இங்கு கிலேத்திருக்காது. இந்நிலைமையை மாட்சிமிக்க அதிபதி கள் ஆழ்ந்து ஆலோசித்து ஆவனவற்றை உடனே விரைந்து செய்யவேண்டும். விளைந்துள்ள விளைவுகள் வெப்ப நிலையின.

இச் சண்டையில் இறந்த தளகர்க்களுன கிளார்க் பல வகையிலும் மிகவும் சிறந்தவன். படைகளில் கின்று நெடுநாளா கத் துணிவோடு உழைத்து வந்துள்ளான். அநியாயமாயிங்கே இறந்து போயினன்; அவனுடைய மனைவியும், மூன்று குழந்தை களும் அகாதர வாயுள்ளனர். தகுந்த ஆதரவு தந்து அக் குடும் பத்தை பாதுகாக்க வேண்டியது கும்பினியின் கடமையாம்.

இனி இங்கு நான் கடக்கவேண்டிய நிலையைக் குறித்து அங்கிருந்து வரும் உத்தரவை ஆவலோடு எதிர்பார்த்திருக்கி றேன்.” என்று இவ்வாறு ஒரு கடிதம் எழுதிச் சங்கத் தலை வர்க்கு அஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு முடிவை அவன் கடிதாக எதிர்பார்த்திருந்தான். கடித வேலையில் கரவுகள் கலந்து கின்றன. அக்காயிதம் 1798 செப்டம்பர் மாதம் 21ந் தெய்தி எழு கப்பட்டது. 10க் கேதி நிகழ்ந்த படுகிலையை உடனே அறிவியா மல் பத்து நாள் வரையும் இடை தெரிந்து குழ்ந்து முடிவில் இங்கனம் அவன் முடித்து விடுத்து முடிவோர்ந்து நின்றன்.