பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது அதிகாரம்.

நியாயம் தெளிந்தது.

  1. mmā āAL=

=

கருமம் கருதி அவன் அனுப்பியிருந்த கிருபம் வந்தது. உரிமையுடன் உடைத்துப் பார்த்தார். கொலேயும் போரும் குவிந்துள்ளமையைக் கண்டு கும்பினிக் தலைவர் பெரிதும் வருங் தினர். திறையையும் செலுக்காமல் முறை மீறி வந்து இப்படிக் கலகமும் செய்தானே! என்று கட்டபொம்மு மீது கடுங் கோபம் கொண்டார். நம்முடைய ஆணேக்கு யாண்டும் பணியா மல் பல ஆண்டுகளாக நீண்டு நிற்கிருன்; எவ்விதமும் இணங் காமல் வெவ்வினை விளைத்து வருகின்ற இவனே எவ் வகை அடக் குவது? பாது செய்வது? என எண்ணி யுளைந்து இறுதியில் எல்லாவற்றையும் ஜாக்சனிடம் நேரில் விசாரித்து அகன்மேல் நேர்வன செய்வோம் என்று தீர்மானித்து அவனுக்கு ஒர் உத்தரவு அனுப்பினர். அதிபதிகள் கடிதம் விதிமுறையே வந்தது.

சிறைப்படுத்தி யிருக்கிற பாஞ்சாலங்குறிச்சித் தான பதியை உடனே திருச்சிக்கு அனுப்புக: போரில் நேர்ந்துள்ள பொல்லாங்குகளின் புலன்கள் தெளிவாகக் கெரிய வேண்டும் ஆகலால் நீயும் நேரில் வருக என அச் சீரியோர் அனுப்பி யிருந்த அக் கட்டளை வக்கது. அகனக் கண்டதும் அங்கே அவன் கொடுமையாகச் சிறையில் வைத்திருக்க பிள்ளையை வெளி யேற்றித் தன்முன் கொண்டுவரச் செய்தான். அவர் வந்து நின்ருர், சரியான உணவின்றி உடல் மிக மெலிந்து புழுதி படிந்த அழுக்கு நிறைந்த ஆடையுடன் அயர்ந்து தளர்ந்து நின்ற அவரை விரைந்து பார்த்ததும் அவன் அகம் திகைத்தான்.

அந்த நிலையில் அவரை மேலே அனுப்பினுல் கனக்கு நிங்கை மிக நேரும் என்று முந்துற அறிந்து தந்திரமாக வெள்ளை யான உடைகளைக் கொணர்வித்து அவற்றை உடுத்திக்கொள் ளும்படி பிள்ளையிடம் கொடுத்தான். அவர் கொள்ள மறுத்தார்.