பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அவன் மெள்ள நெருங்கி நல்ல வெள்ளை இது; எடுத்து உடுத் திக்கொள் பிள்ளை' என உள்ளுறவாளன் போல் உரைத்து கின்ருன். வேண்டாம் என்று அவர் வெறுத்துத் தள்ளினர். மேலும் நயந்து வேண்ட அவர் இகழ்ந்து மொழிந்தார்: "இழுக் குடைய உன்னுடைய உடையை நான் எடுக்க மாட்டேன்; இந்த அழுக்குடையுடனேயே போய்க் கும்பினி அதிபதிகள் முன் நின்று எனது விழுக்குடிப் பிறப்பையும், ஒழுக்க நிலையை யும், உனது பழிச்செயலையும் வெளிப்படுத்துவேன்' என்று வெகுண்டு மொழிந்தார். இங்கனம் மொழியவே சரி போ; உன் உயிருக்கு உலை வைத்திருக்கிறேன் ' என உருத்து மொழிந்து போர்ச்சேவகர் எண்மருடன் இவரை அவன் போக விடுத்தான். முன்னும் பின்னும் பாதுகாவலோடு இன்னல் நிலை யில் இவர் எழுந்து போனர். மறுநாள் அவன் குதிரையில் ஏறி விரைந்து சென்று திரிசிரபுரத்தை அடைந்து அயலிடம் அமர்ந்து உரியவர் சிலருடன் உறவாடி உறுவினை நாடி உறுதி சூழ்ந்து இவரது வரவினை எதிர்பார்த்திருந்தான். இவர் வந்து சேர்ந்ததும் முன்னறிக்கை செய்து வாயிதா நியமித்துக் குறித்த காலத்தில் வேண்டிய ஆயக்கங்களுடன் சபையுட் புகுந்தான். ஈண்டிய யா வரும்.அங்கு இறைமையான உரிமையோடுஇடம்பெறலாயினர். இந்த நீதி முறையை விசாரணை செய்ய மேலிருந்து கலைமை அதிபதிகள் அங்கு வந்திருந்தாராதலால் சார்ந்தவர் நிலைகளை ஒர்ந்து விசாரித்தார். நியாய மன்றத்தில் பிள்ளை வந்து கிற்கவும் அங்கிருக்கவர் எல்லாரும் அவரது உருவ நிலையை நோக்கிச் சிறிது உள்ளம் இரங்கினர். பின்பு ஜாக்சனைப் பார்த்து உண்மை யாக நிகழ்ந்தது என்ன?’ என நேரே கேட்டார். அவ் அதிகாரி மரியாகையுடன் துரைகளை முறையே நோக்கி இவர் மீது குறை களைக் கூறினன். வாதி நிலையில் உரைகள் மோதி வந்தன.

ஜாக்சன் தானுபதி மேல் சாற்றிய குற்றங்கள். பிள்ளையைச் சுட்டிக்காட்டி இவன்தான் பாஞ்சாலங் குறிச்சி ஜமீன் மானேஜர். இராமநாகபுரத்தில் நடக்க அக்