பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ரும் மறந்தும் கினையார். இவர் நினைந்து செய்துள்ள வஞ்சகங் களே நினைத்த போதெல்லாம் என் நெஞ்சம் கிலைகுலைந்து கலங்கு கின்றது. கலேமையை இழந்து தவித்து வருந்துகின்றேன்.

சங்கமே கஞ்சம் என்று நான் சார்ந்து வந்திருக்கின் றேன். நடுவு நிலைமையுடைய இந்த நீதி மன்றத்தில் நல்ல நியாயம் கிடைக்கும் என்றே நம்பி நிற்கின்றேன். இனத்தவர் என்றும், அயலவர் என்றும், றெவினர் என்றும், பகையினர் என்றும், வலியர் என்றும், மெலியர் என்றும், பாரபட்சம் பாராமல் யாரிடமும் நேர்மையுடன் நின்று நிலைகளை ஒர்ந்து நெறிமுறைகளை ஆராய்ந்து நீதி புரிகின்ற தெள்ளிய வெள்ளைத் தரைமக்கள் இப் பிள்ளையிடத்து மட்டுமா பிழைபடுவார்கள்? ஒதபோதும் படார்; உண்மை கண்டு உரியதே செய்வார் என்று கான் உள்ளுற கம்பி உறுதி கொண்டு இருக்கின்றேன். இனி மேலும் பேசல் மிகையாம். தங்கள் அருமையான காலத் கை இதுவரை விளுக்கியதற்கு இரங்குகின்றேன். என்னு டைய சிறுமொழிகளே இவ்வளவில் நிறுத்துகின்றேன். தரும கிலையமான அருமை நீதிபதிகளே இது வரையும் நான் இங்கே சொல்லி வந்தனவெல்லாம் உண்மையில் நிகழ்ந்த உறுதி மொழி கள் என்பது திருவுளம் அறியும். நேர்ந்துள்ள நிலைகளை ஆராய்ந்து தேர்ந்து நீதி செலுத்தி என் அரசினையும், என்னேயும் ஆகரித்து அருள் புரிய வேண்டும்; எனது விண்ணப்பம் இதுவேயாம்' என மிகவும் விசயமாய் கின்று அபயங்கூறி இவர் அமரலாஞர். இங்கனம் பிள்ளே சொல்லிய முறையீடுகளை யெல்லாம் கேட்டு வந்த அவ் வெள்ளை அதிபதிகள் உள்ளதை உள்ளபடி யே சொல்லினர் என உள்ளம் இரங்கினர். உண்மைகளை ஊன்றி ஆராய்ந்து ஊகித்து உணர்ந்தார். பல இடங்களுக்கும் அலைத்து அலைத்து அலக்கழித்து இறுதியில் நேரே பொறுதி யிழக்கும்படி செய்திருத்தலால் உறுதியாளனை அக் கட்டபொம்மு மனக் திரிக் து சினந்து போர் செய்து அங்ஙனம் விரைந்து போயுள்

ளான் என அவர் உணர்த்து கொண்டார். கொள்ளவே முன்