பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

எதிரே கிடைத்தவரை மட்டும் அன்று அவ்வளவில் கொன்று போனது: இன்றேல் கொலைகள் பல அங்கே குவிந்திருக்கும்.

துரைகள்:-அப் போரில் அவர் தூரம் நின்று சுடுகற்குரிய வெடி முதலிய சுடு கருவிகள் ஏதாவது வைத்திருந்தாரா?

பிள்ளை-வெடி இல்லை. வேட்டும் இல்லை; ஈட்டியும் சுருட்டு வாளும் காம் அவ்வமையம் அவரிடம் இருந்தன.

துரைகள்:-பிடிவாளால் அவ்வளவு படைகளை வெல்ல முடியுமா? நீர் சொல்லுவது மிகவும் அதிசயமாக உள்ளதே!

பிள்ளை:-மெய்யாகச் சொல்லுகின்றேன் துரைகளே! அவர் கைவாளை யோக்கின், எதிரியின் வாழ்நாளைக் காலன் நோக்குவான். அவர் வேலாயுதக் கடவுளின் மேலான அருள் மிகப் பெற்றவர். வாளாயுதம் முதலியன யாதும் இல்லாமல் தம் கோள்வலியாலேயே எவ்வளவு ஆள்வலிகளையும்அவர் தொலைக்க வல்லவர். உள்ளதையே உறுதியாகச் சொல்லுகிறேன்; அவ் விர வள்ளலைக் கண்டவரெவரும் இத் தீர நிலையை நேரே தெரிவர்.

துரை கள்:-அ வர் இங்கே வருவாரா?

பிள்ளை.-சமுகத்திலிருந்து ஒரு கடிதம் போனுல் உடனே வருவர். கடை பாதும் இராது.

துரைகள்:-இடையே இகல் விளைந்துள்ளமையால் அவர் ஐயும்அத் தடை சொல்லவும் கூடும். நாம் அவரை இங்கே சேர் முகமாய்க் கண்டுகொள்ள ஆர்வமாய் விரும்பி யிருக்கின்ருேம்: ஆகையால் நீரே கேரில் போய் அவரை அழைத்து வரலாமா?

பிள்ளை:-துரைகள் எ ப் படி உத்தரவு செய்தாலும் அப்படியே செய்யக் காத்திருக் கின்றேன்.

இப்படி உடல் வளைந்து உள்ளங்குழைந்து பிள்ளை உரைத்து நிற்கவே இவரது விநயமான இனிய மொழியையும், பணிவுடை

மையையும் கண்டு அவர் உவகை மீக்கொண்டார். யாண்டும்