பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

தார். உள்ளே கிட்டபொம்மைக் குறித்து எழுதியிருப்பதைக் கண்டார். வியக்கார். மேலே விழைந்து சாலவும் உவந்து

சதுருடன் கோக்கினர். அக் கடிகநிலையை அடியில் காண்க.

டேவிசன் கடிதம்.

' அருமை ஐயன்மீர் கண்ணியம் வாய்ந்த தங்களுக்கு ஒரு கடிதம் எழுதும்படி வாய்த்த இச்சந்தர்ப்பத்தை நான் எண்ணி இன்புறுகின்றேன். இங்கே கண்ணியுள்ள பாஞ்சாலங் குறிச்சி ஜமீன்தார் நல்ல சுத்தவீரர். பரம்பரையாப் இத்தென் ட்ைடில் சிறந்திருக்து தனியரசு புரிந்துவரும் இனிய மரபில் வந்தவர். வஞ்சனேயும் குதும் நெஞ்சறியாதவர். காலம் கண்டு, இடம் நோக்கிச் சமயம் பார்த்து இச்சகம் பேசி இதமாய் கடந்து தம் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் சிலர் போல் அவர் யாண்டும் கொச்சை இயல்பு கொள்ளாதவர். எவர்க்கும் வசமாய் அடங்கி இளிவாக இணங்கிப்போகும் எளிய தன்மை யின்மையால் வணங்காமுடியன் என இவ்வையஞ் சொல்லும்

படி அவர் வாய்ந்து நின்ருர். அவரது நிலை தகவு மிக வுடையது.

உடனிருந்து பழகி ஊன்றி நோக்கினல் உயர்ந்த குணங் கள் பல அவரிடம் நிறைந்திருப்பதை நேரே காணல்ாம். பழகி ஞர்க்கு உயிரையும் கொடுக்கும் உரிமை யுடையவர். தாம் பிடித்ததைச் சாதிக்குக் தன்மையும், தம்மை அடுத்தவரை ஆகி ரிப்பதில் என்ன அல்லல் நேர்ந்தாலும் தளர்ந்துவிடாத திண்மை யும் அவரிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவரது இயல்பு அறிந்து உறவுகொண்டார்க்கு எளியராப் நின்று எல்லா வுதவிகளையும் அளியுடன் செய்வார். அவரை நயமாக அணைத்துத் தனக்குத் துணை செய்துகொள்ளாமல் நமது ஜாக்சன் இகல் கொண்டு இடர் செய்துள்ளமையால் இராமநாதபுரத்தில் இரு வருக்கும் பெருங்கலகம் விளைந்திருக்கின்றது. அவ்விளைவின் மூலகாரணத்தை ஆராய்ந்து நோக்கிப் பாரபட்சம் பாராமல்

நீதிசெய்வது கும்பினியாரின் குலக்கடமையாகும். அயல்நாட்