பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெராவது அதிகாரம். பிடியுண்ட பிள்ளை மீண்டு வந்தது.

  • mi-mo

முன்பு துரைகளிடம் விடைபெற்று முறையே .ெ வ ளி வ க் க தானுபதிப் பிள்ளை திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை அருகே ஒரு விட்டில் தங்கி இரண்டு நாளாக இளைப்பாறி யிருந்தார். தமக்குக் காரியம் அநுகூலமானதை கினேந்து களிப்பு மீக்கடர்ந்து தாயுமானவர் கோவிலுக்குப் .ே ப ா ப் அருச்சனை ஆராதனைகள் புரிந்து சுவாமி கரிசனம் செய்து கொண்டு நல்ல நேரம் பார்த்துக் குதிரையி லேறித் தென் திசை நோக்கிப் புறப்பட்டு விரைந்து வந்தார். வரும் வழியில் இடையே திருமங்கலத்தில் இறங்கி ங்ாகம ரெட்டியார் என்னும் தனிகர் வீட்டில் ஒருநாள் தங்கி யிருந்தார். அங்கனம் இருக்குங்கால் பிள்ளை நெஞ்சில் சில சந்தேகங்கள் துள்ளி எழுந்தன. "வெள்ளையர்கள் மிக்க சூழ்ச்சி யுடையவர்கள்; காரிய சாதனையில் கைதேர்ந்தவர்கள்; நம் விரிய மன்னனை கேரில் அழைத்து வரும்படி ஆவலோடு என்னை எவி யுள்ளனர். என்ன நோக்கமோ? முன்னம் நேர்ந்தது போல் இன்னமும் சேருமோ ? இராமநாதபுரத்தில் கப்பிப் போய்விட்டான் ; இங்கே கப்பாமல் வேலையை முடிக்கவேண்டுமென்று பலத்த படைகளைப் பக்க பலமாக வைத்துக்கொண்டு சதி செய்யவும் கூடுமே அதிகாரிகளை எப்படி நம்புவது? ஆனல் சொல்லிலும் செயலிலும் நல்லவர் என்று தெரிகின்றது; பொல்லாத நிலை ஒன்றும் தோன்றவில்லை. அப்படியே மாறுபட்டாலும் அந்த வீர மடங்கலை யார்தான் என்ன செய்ய முடியும்? ஆனதை நேரே போய்ச் சொல்வோம்; ஆவது ஆ க ட் டு ம்” என இன்னவாறு பல பல எண்ணி யுளைந்தார். விரகும் விசயமும் மிகவும் உடையவராதலால் இங்ங்னம் ஐயங்களில் உழந்து அலமந்து நின்ருர். பின்னர் எழுந்தார். பெரிதும் விரைந்து