பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாஞ்சலாங்குறிச்சி வீர சரித்திரம்

தொடர்ந்து தென் திசை நோக்கிப் படர்ந்தன. இம் மானவர்

சிவிகை மாண்புடன் நடந்தது. மகிமைகள் விரிந்து வந்தன.

இம்மன்னர் இங்கே வரவும் அங்கே கும்பினித் தலைவர் ஜாக்சனே அழைத்தனர். எதிரிகள் முன் வைத்துக் கம்மவனேக் குற்றஞ்சாட்டுதல் குறையாம் என்று அத்துரை மக்கள் குறித் திருந்தார் ஆதலால் இத்துரை மகன் அயல் அகலவும் அவனே முறையுடன் வருத்தினர். அவன் வந்து கின்ருன். பிள்ளையின் வாக்குமூலத்தோடு மன்னன் வாய்மொழியையும் நேரே அறிந்து கொள்ள விழைந்து காரியம் சூழ்ந்து கருதியவாறே உறுதிபெற வுணர்ந்து உண்மையை மு டி வு செய்து கொண்டமையால் திண்மையுடன் அனைவரும் அவனைக் கடிது நோக்கி முடிவுரை பகர்க்கார். நியாயத் தீர்ப்பு நெறிமுறையே நிகழ்ந்தது.

கும்பினித் தலைவர் ஜாக்சனே நோக்கிச் செய்த தீர்ப்பு.

தென்னுட்டின் கலைமை அதிகாரத்தை உனக்குக் கந்திருக் தும் அக்காட்டின் கிலேமை கெரியாமல் நீ நிமிர்த்து நடத்திருக் கின்ருப். முன்னம் உன்னை அனுப்புங்கால் கட்டபொம்முடைய நிலைமை முழுவதையும் தேரே உணர்த்தி மாறுபாடு மீருமல் இகமாக நெருங்கி அவரை இனிது வசமாக்கி வரி வரைந்து கருமமே கண்ணுப்க் காரியம் புரிந்து வருக என்று கருத்துடன் விடுத்தும் அதனேச் சிறிதும் கருதவில்லை. நிலையறியாமல் புலை புரிந்து கலகம் விளைத்தாய்; கொலைகள் விழுந்தன. சொல்லிய பொருள் வரவும் இல்லையாய் முடிக்கது. பரம்பரையாய் அங்குச் சிறந்து வந்துள்ள ஒரு பாளையகாரனை வேளையறியாமல் பல இடங்களுக்கும் அலைத்து வெகுளியை மூட்டிய அதனுலேகான் இவ் வினே விளைந்துள்ளது. விநயமில்லாத உன்னை இன்று முதல் இப்பதவியில் கின்று விலக்கியிருக்கிருேம்” என்று விதித்துணர்த் தினர். உணர்த்தவே அவன் மனங்கலங்கி மாருென்றும் கூருமல் தலைகவிழ்த்து கிலேகுலைந்து போனன். போனவன் அந்த அவ

மானத்தால் அலமந்து கொத்து சில நாளில் பொன்றவும் ஆளுன்.

o