பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித் திரம்

இருக்தி உயர்ந்த மரியாதைகளுடன் உவந்து உபசரித்து இவருக்கு அரிய பெரிய விருத்து ஒன்று அவர் ஆர்வமொடு செய்தார். அம் மன்னரது பேரன்பை வியக்து உளம் மிக மகிழ்ந்து ஒரு நாள் இருந்து மறுநாள் இவர் விடை பெற்று எழுந்தார். அவர் சிறிது துனரம் உரிமையோடு உடன் வந்து உறவு கொண்டாடிப்

பரிவுரை பகர்த்து உவந்து வழியனுப்பி அகன்று கின்ருர்.

இவர் படையுடன் எழுந்து அடைவுடன் கடந்து மறு நாள் வந்து மதுரையை அடைந்து அங்கு மகிழ்ந்து தங்கினர்; இரவு திருக்கோவில் சென்று சொக்கசாகப் பெருமானேயும், மீனுட்சியம்மையையும் தொழுது வணங்கிப் பெருகிதி வழங்கி, அருகு அடைந்த மறையவர் எ வர்க்கும் தகுதி யறிந்து உறுபொ ருள் உதவி ஒருபொழுது இருந்து வருபொழுது எழுந்து உரிய பரிவாரங்களுடன் பெருவழி கடந்து தம் திருநகர் வந்து சிறப் புடன் சேர்ந்தார். சேரவும் கார்கண்ட பயிரென இவரை நேர் கண்ட வுடன் குடிகளெல்லாரும் குதுனகலங்கொண்டு கூடி மகிழ்ந்து அடி பரவி கின்ருர். கும்பினித் தலைவர்களாகிய அருமைத் துரைகள் இவருக்குப் பெருமையாகத் தங்துள்ள உரிமைப் பொருள்களை நோக்கி அங்குள்ளவரெல்லாரும் உவகை மீ.க்கூர்ந்தார். இவரது திறலையும் விறலையும் வரவு நிலையையும் வியந்து கொண்டாடி அனைவரும் பு க ழ் ங் து கிற்க இவர் கொண்டுவந்த பொருள்கள் எல்லாம் செந்திலான் வரவு' என்று குறித்து வைத்தார். வைத்தபின் தமது அருமைத் தாயிடம் சென்று, தாள் பணிந்து நின்று, காம் சீமை அதிபதிகளிடம் போனதும், சீரும் பேரும் பெற்றுத் திரும்பி வந்ததும் தெரிய வுரைத்தார். அவ் விரத்தாய் இவ் வீர மகனை விழைந்து நோக்கி 'அருமை மகனே! பெருமை வாய்ந்த அப் பேரரசோடு என்றும் உரிமையாய் கின்று உதவி புரிந்து வருக' என இனிது மொழிந்து கனியும் அன்புடன் உவந்து வாழ்த்தினுள். இவர் வணங்கி வெளி வந்தார். வரவே தமது அருமை நண்பராகிய டேவிசன் துரை