பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



ஆதி நிலை

11

தனது இளமையான அருமை மகனே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் போற்றி வளர்த்துப் புனைந்து வந்தான். அப்பொழுது அவனுக்கு வயது பதினைந்து நிறைந்து பதினாறாயது. வாலப் பருவம் வளர்ந்து வந்தது.

ஆண்டு க௬ என அன்று அமைந்திருந்த அவ்ஆண்டகையே நீண்ட புகழோடு இன்றும் தன் பெயர் நிலவ நிற்கின்றான். ஆதலால் தலைமையான அவனது நிலைமை நீர்மைகளை இனி ஆவலோடு நாம் அறிய நேர்கின்றோம்.

இளம் பருவத்திலேயே யாதும் அஞ்சா நெஞ்சனாய் ஆண்மையுற்றிருந்த இவன் உரிய பருவத்தே தெலுங்கும், தமிழும் சேரக் கற்றான். அத்துடன் வாள் வேல் முதலிய படைக் கலங்களையும் ஊக்கமோடு பயின்று தெளிந்தான். மல்லிலும், வில்லிலும், கம்புச் சிலம்பத்திலும் எல்லையில் திறலுடன் இவன் இலங்கியிருந்தான். போரென வீங்கும் பொலங்கொள் தோளனாய் இவ்வீர மகன் விளங்கி வருவதைக் கண்டு உறவினர் யாவரும் உளங் களித்து நின்றார். வந்து தங்கிய இடம் வளஞ்சுரந்திருந்தமையால் பசு நிரைகளை இனிது புரந்து சிறு குடிசைகள் புனைந்து பெருமகிழ்வுடன் இருந்து வந்தார். அந்நிலையில் ஆண்டுகள் ஐந்து நீண்டு கழிந்தன.

அங்ஙனம் இருந்து வருங்கால் ஒருநாள் இரவு கள்ளர் சிலர் அயலிடங்களில் போய்க் கொள்ளை செய்து நள்ளிருளில் அவ்வழியே வந்தார். அவ்வமயம் தற்செயலாக எழுந்த இவன் ஆளரவம் கேட்டு இவ்வேளையில் இது என்? என வெளியே வந்தான். வந்தவன் அடர்ந்து போகின்ற அவர் முன் அஞ்சாது போய் நின்று "யார்? நீர்!" என்றான். காரிருளில் நேரெதிர்ந்து தனியே துணிந்து வந்து இவன் கேட்ட கேள்வி முதலில் துணுக்கத்தை விளைத்ததேனும் உருவத்தை உற்று மோக்கி ஓர் இளைஞன் என உள்ளிகழ்ந்து அக்கள்ளருள்