பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

ஒருவன் தன் கையிலிருந்த கம்பால் இவன் கலையில் மெள்ள அடித்தான். அடிபடவே இவன் கடிது கொதித்துச் சிங்கக் குருளைபோல் சீறிப்பாய்ந்து அக் கம்பைக் கடுத்து வெளவிக் கறங்கெனச் சுழன்று மறங்கொண்டு மண்டி உரங்கொண்டு மோதி உருத்து அறைந்தான். உற்றவானவரும் ஒருங்கே வீழ்ந் தார். அடியில் வீழ்ந்தவரை ஒரு கொடியில் எண்ணினன். பன்னிரண்டுபேர் ம ண் ணி ல் கிடந்தனர். உண்ணிறைந்த உவகையுடன் தனது உறவினரைக் கூவியழைத்து உற்றதை உரைத்து அனேவரையும் கட்டிவைத்துக் களவுப் பொருள்களை ஒரு ப க் க ம் கொட்டி வைத்தான். பொழுது புலர்ந்தது. இரவில் நிகழ்ந்ததை அருகிலிருந்த நகரிலுள்ளவ ரெல்லாரும் வினவியறிந்து விரைவில் வந்து கண்டு அக் கள்ள மாக்களைக் கடிந்து இகழ்ந்தார்; இப் பிள்ளை வீரனைப் பெரிதும் புகழ்ந்தார். இகழ்ச்சி யடைந்து அச் சோரர்கள் இன்னலுறுவதை நோக்கி இவ் விர மகன் இரக்கமீதுார்ந்து கட்டவிழ்த்து விட்டு இப்பட் டிமைத் தொழிலை இனிப் பண்ணுதிர் என ஒட்டி யுணர்த்தி ஒழிய விடுத்தான். அவர் உணர்ந்து நாணி உள்ளுற இவனே வியந்து போனர். அந்தக் கொள்ளைப் பொருள்களை உடையவ ரிடம் இவன் கொடுத்தனுப்பினன். இவனது உள்ளப் பெரு மையையும், வள்ளம் குணக்கையும், கள்ளருங் திறலையும் எல்லாரும் அ ந் து எத்தி கின்றர். அயலிடமெங்கனும் இவனது வலிநிலை புகழுற ஓங்கிப் பொங்கி கின்றது.

நிலையழிந்து பிழைக்க வந்த இடத்திலேயும் தன் நிலையை உலகம் அறிய நிலைநாட்டிய இவனது நிலைமையை வியந்து பெற்ருேரும் உற்ருேரும் பெரிதும் மகிழ்ந்தார். கட்டிய ஆண் மையை நினைத்து கெட்டிபொம்மு என்று அன்று உரிமையோடு இவனே உவந்து அழைத்தார். இவனது இயற்பெயர் பொம்மு என்பதே. திறமையுடன் நின்று கனியே இவன் செய்த திறலே நோக்கிக் கெட்டி என விசேடித்துரைத்தார். கெட்டி என்பதற் குத் தெலுங்கில் வல்லமை என்பது பொருள். இவனது வல்