பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

யிைருக்க சங்கரசிங்கு எ ன் ப வன் இக் கட்டபொம்மனது அருந்திறலேயும் பெருந்தகவையும் உணர்த்தி அரசனிடம் உதவி கோரக் குறித்தான். தன் எல்லேயில் வந்து தங்கியுள்ள இவ் வல்லவனே ஒல்லையில் அழைத்து உற்றகையுரைத்து உறுதிக் துணையாய் கின்று உதவி செய்யும்படி அவ் வேந்தன் பெரிதும் வேண்டினன். அவனது வேண்டுகோளுக்கு இவ் விர மகன் உடனே இணங்கினன். இந்த ஆண்டகையின் மன நிலையை யறிந்து அப்பாண்டிய மன்னன் மகிழ்ந்து வேண்டிய வரிசை

களே விழைந்து செய்து விறலுடன் விடுத்தான்.

மறுநாட் காலையில் மருவலர் இருவரும் பொருபடை யோடு பொங்கிவந்து நகரின் அயல் வளைந்து அமர்மேல் மூண்டு சமரூக்கி நின்ருர். அவரது நிலையினே அறிந்ததும் இக் குலமகன் உடைவரிக்த கட்டி இடைவாள் புனைந்து, படை அயல்வா விடைபோல் விரைந்து பகைமேல் சென்ருன்.

மூவாயிரம் படைவீரர்களோடு மூண்டு வந்திருக்கும் அத் கலேவரிருவரும் இவ் ஆண்டகை வருகின்ற அடல் நிலையைக் கண்டு அதிசயம் கொண்டு முதலில் அஞ்சினரேனும் அருகில் அணுகவும் உருவினை நோக்கி ஒரு சிறுவன் என உள் இகழ்ந்து ஊக்கி நின்ருர். இவன் நெருங்கி முன்னேறவும் உடனே அவர் ஒருங்கு வளைந்தார். இவன் உள்ளுறப் பாய்ந்து ஒள் வாள் விசிக் கொள்ளிவட்டம்போல் கொடிது சுற்றித் தள் ளருக்திறலுடன் கடையற ஏறி அடுசமர் புரிந்தான். படு கொலைகள் பல விழுந்தன. தலைகள் உருண்டு கொலைகள் விழவே நிலை திரிந்து நெட்டழிந்து படைமுரிங் தோடியது. ஒடவே புலிக்குருளைபோல் கெலித்தடலேறி வெற்றித்திருவுடன் இவன் விரைந்து மீ ண் டா ன். அரசன் அறிந்து அகமிக மகிழ்ந்து கமருடன் எதிர்கொண்டு ஆர்வமீதார்ந்து அணைத்து மகிழ்ந்து அழைத்து வந்து அரண்மனையில் வைத்து அரிய உபசாரங்கள் செய்து பரிசில் பல தந்து பண்பு பாராட்டி