பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

யும் கன் ஆட்சியில் புகுங்கனவே என்று அலமந்து கவன்ருர். வெள்ளே அதிபதிகள் உள்ளம் கிரிந்து எள்ளி வெறுக்கும்படி பிள்ளை செய்து விட்டாரே! என்று பெருந்துயர் உழந்தார்.

"இனி என்ன செய்வது?' என எண்ணி வருந்தினர். முன் னம் தமக்குக் கும்பினியார் செய்த உதவி நலங்களை யெல்லாம் கினேந்து கினேந்து நெஞ்சம் இரங்கினர். கொஞ்சமும் யோசியா மல், நெஞ்சமும் அஞ்சாமல் பிள்ளை போய் இப்படி பிழை செய்து வந்துள்ளாரே!” என்று பெரிதும் மறுகி இவ் விர வள்ளல் உருகி உளைக்கது உள்ளே உறைந்து கிடந்த அரிய பண்புகளே உலகம் அறிய உணர்த்தி நின்றது. உரிமையாய் உற வாடி கண்புகொண்டு அருமை பெருமைகளே அன்போடு புரிந்த கும்பினிக்குச் சிறுமையா வம்பு செய்தது கொடிய தீமையே என கெஞ்சம் கொதித்தார். நேர்ந்த நிகழ்ச்சிகள் நெடிய கவலை களாய் நீண்டு கின்றன. பலவும் பன்னிப் பரிந்து உளைந்தார்.

கண்பை நயந்தது. சங்கமுதல் தலைவர்கமை உவந்தழைத்துத்

தகைமைசெய்து நாம்செய்துள்ள பங்கம்எல்லாம் அறமறந்து பண்புபா

ராட்டியுயர் பரிகள் ஏழும் தங்கமணிச் சிவிகைமுதல் பலவும் தந்து

உறவாடித் தமிழ்த்தென் னுட்டின் சிங்கம்எனப் புகழ்ந்துவிட்ட சங்கநெல்லேக்

கொள்ளேயிட்ட தீமை என்னே! (1)

நன்றியை நினைந்தது. ஒருநன்றி செய்தாரை உள்ளத்தே

கினேந்தென்றும் உயிர்கட் பாகப் பெருகன்றி யுடன்பேணிப் பெரியர்கிற்பர்;

சிறியர்அன்றே மறந்து போவர்; தருகன்றி தனே மறந்தும் தாமவர்க்குக்

கேடெண்ணல் சண்டா ளர்க்கே வரும்ன்றி மற்றவர்க்கு வருங்கொல்லோ?

வந்ததிவன் பாலி தென்னே? (2)