பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆதி நிலை. 17

இதனுல், இந்நகரின் நிலைமையும், பெயரின் இயல்பும், அரசின் தலைமையும் காலமும் பிறவும் சாலவும் புலனும்.

முன்பு அமர்ந்திருந்த அழகிய வீரபாண்டிய புரத்திற்கு வடகிழக்கு இரண்டு மைல் தாரத்தில்தான் இக்கப்புதிய நகரம் அதிசய நிலையில் துதிசெய்ய நின்றது. அந்தப் பழையபுரம் இருந்த இடத்தில் இது பொழுது ஒட்டப்பிடாரம் என்னும் ஊர் உருவாகி யுள்ளது. கானுதிபதி சிவசுப்பிரமணியபிள்ளையின் மரபினர் அவ்வூரில் இப்பொழுதும் குடியிருந்து வருகின்றனர். இப் பாஞ்சைப்பதிபால் அங்கே வாஞ்சை வளர்ந்துள்ளது.

தமரடைந்தது.

அருங்கிறல் ஆண்மையோடு பெருந்திருவும் அடைந்து இங் வனம் இவன் சிறந்து நிற்பதையறிந்து விஜயநகரம், விசாகம், கஞ்சம் முதலிய வடகாடுகளிலிருந்து கம்பளத்தார் பலர் முன் லும் பின்னுமாக இக் காட்டில் வந்து குடியேறினர். அச்சாதி யினர் தோகலவார், மேகலவார், பாலவார், பெல்லவார், சில்ல வார், குரு சில்லவார், எற சில்லவார், கொல்லவார், மல்லவார் என ஒன்பது பிரிவுகளை யுடையவர். இப் பிரிவுகளெல்லாம் அவரவரது உடைமைகளையும், உரிமைகளையும் ෆ් றி த் .ே த தெலுங்கு மொழியில் எழுந்தன. தோகலவார் என்பதற்குப் பசுமாடுகளை யுடையவர் என்பது பொருள். அது தமிழில் கோக்கலவார் என வழங்கலாயது. இம் மரபினருக்குக் குடிப் பெயரும் கோத்திரங்களும் உண்டு. இப் பிரிவினர் திருநெல் வேலி ஜில்லாவில் மட்டும் உள்ளனர். காடல்குடி, குளத்தார், மேல்மாக்கை, என்னும் இம் மூன்று ஜ மீ ன் க ளும் பாஞ் சாலங்குறிச்சி இனத்தைச் சேர்க்கவை. எட்டையாபுரம், ஆற்றங்கரை,கண்டவநாயக்கனூர், காமயநாயக்கனூர், கூளப்ப நாயக்கனூர், போடிநாயக்கனூர், அம்மையநாயக்கனூர், எற சக்காநாயக்கனூர், தொட்டப்பநாயக்கனூர், பேறையூர், தும்

பிச்சிநாயக்கனூர், கடவூர், இடையகோட்டை மருங்காபுரி,

3