பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20s. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

என்தும் பொருளில் ஜக தேவி எனச் சிறந்து உத்தம நிலையில் சித்தி யுதவி வீர சத்தியாய் விளங்கி நின்ற அத் தெய்வம் இன்று சிறு தேவதையாய் எண்ணப்பட் டுள்ளது. ஒரு குலம் அதில் கோன்றிய மக்களது நிலைமையால் தலைமை எய்தி விளங்கு கல்போல் வழிபடுகின்றவர்களுடைய கிலேமையைப் பொறுத்தே தெய்வமும் ஒளி பெறும் என்க. உயர்வும் காழ்வும் மனிதனது செயல்களில் சேருகின்றன. அயலிருந்து வருவன அல்ல. - * பெருமைக்கும் ஏனேச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளேக் கல்' -- (குறள், 505). என்னும் அருமை வாசகம் ஈண்டு உரிமையாக உளங் கொள்ளத் *. தக்கது. அறிவுடைய மனிதன் புனிதமான செயல்களிலும் இயல்களிலும் சிறந்து உயர்வடைய வேண்டும். உள்ளத்தளவே மனிதன் உயர்ந்து விளங்குகின்ருன். வெள்ளம் போன்ற படை களைக் கண்டும் எள்ளளவும் கலங்காமல் உள்ளுரங் கொண்டு, நள்ளிருளில் உறுதி பெற கின்று அவ் ஒள்ளிய சக்தியைச் சக்தி உபாசகர் ஆகிய இவ் வீர மன்னர் அன்று நேரும் போரில் வெற்றி யுண்டாகும்படி வேண்டிப் பணிக்து மீண்டு வந்தார். -- வந்தவர் ஆயுக சாலேயி லிருந்த ஆயுதங்களை யெல்லாம் ஆயக்கஞ். செப்து, ஆண்டமர்ந்து நின்ற படை வீரர்களுக்கு இடமறிந்து பொர வேண்டிய நிலைகளையெல்லாம் உணர்த்திஞர். அதன் பின்பு o அரண்மனை புகுந்து செந்திற் பிரானேயும் தேவியையும் சிங்கையுள் தியானித்தத் தமது அரிய வடி வாளை புருவி எடுத்து, இலட்சுமி விலாசம் என்னும் இனிய மாளிகை படைந்து முடிவு தெரிய விடிவு நோக்கி யிருந்தார். செடிய வடி வாளேப் புடை யமைய வைத்து இன் ஆண்டகை அன்றமர்க் திருந்த மாட்சி காண் டகைய ஒர் வீரக் காட்சியாப்க் கவினுற்று கின்றது. பேர்ர் முரசம் கேட்டபின் ஊரெங்கும் விழிப்பாப் உறங்கா திருந்தது.

o

mm *

so a

--

கட்டளேக் கல்-உரை கல். பொன்னே உ ை கல்லால்' மாற்று அறிவது போல் ஒருவனுடைய பெருமையும், சிறுமையும் அவனது செயல் இயல்களால் அறிக் து கெர்ள்ளலாம் என்பதாம். செயல் இனியது ஆயின் அவன் உயர் மகன்; கொடியது எனின் இழி மகன். புரியும் கருமங்கள் மக்களே மருமமக் காட்டிக்கொண்டிருக்

கின்றன. மன கலத்தின் அளவே மனிதன் உயர்ந்து வருகிருன், ..