பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம்.

கட்டபொம்மன் வழிமுறை.

ஜகவீரபாண்டியக்கட்டபொம்மு. உ-வது பட்டம்: 1148-1171. தனக்கு அன்போடு அரசை அருளிய பழைய பாண்டிய

மன்னன் பெயரையே ஈண்டிய நண்போடு தன் மகனுக்குக் கட்டபொம்மு நாயக்கர் இட்டிருந்தார் ஆ த ல ல் ஜகவீர பாண்டியக் கட்டபொம்மு என அவன் பட்டமெய்தி நின்ருன். இவ்வழியில் வரும் அரசர்க்கெல்லாம் கட்டபொம்மு என்பது பட்டப்பெயராய்ச் சூட்டப் பெற்றது. அதற்குக் காரணம், அப்பேராளன் பாராளும்படி தன் பரம்பரையை உரஞ்செய்து வைத்துள்ள உரிமையும் அருமையும் க ரு தி என்க. அம் மகனும் தந்தை போலவே வீரமும் வண்மையும் உடையனப் யாரும் இன்புற இருபத்துமூன்று ஆண்டுகள் பெரும் புக ளோடு அரசுபுரிந்திருந்தான். அதன்பின் அவனுடைய மகளுன வீரபொம்மு என்பவன் பட்டத்துக்கு வந்தான்.

வீரபொம்மு. க-வது பட்டம்: 1171—1201. இவன் முப்பது வருடங்கள் முறைபுரிந்தான். பாட்டன் பெயரை நாட்டில் நாட்டி ஈட்டம் மிகச் செய்தான். இவனுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். மூத்தவன் பெயர் கெட்டி பொம்மு. கங்தை இறந்தபின் இவன் அரசனப் வந்தான்.

கெட்டிபொம்மு. ச-வது பட்டம்: 1201-1280.

இவன் இருபத்தொன்பது வருடங்கள் இருந்தான் அதன் பின் இவனுடைய மகன் ஆதிராமு என்பவன் ஆட்சிக்குவங்கான்.

■■ ---